6ஆம் வகுப்பு படிக்கும்போது கிரிக்கெட் வீரரை காதலித்தேன்: ஐஸ்வர்யா லட்சுமி
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் பூங்குழலி என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பிரபல கிரிக்கெட் வீரரை மனதிற்குள் காதலித்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, விஷால் ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை அடுத்து தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ ஆர்யாவின் ’கேப்டன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கேரக்டர் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. அதேபோல் விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ‘கட்டா குஸ்தி’ என்ற திரைப்படத்தில் அதிரடி நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்துவரும் ஐஸ்வர்யா லட்சுமி இரண்டு தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ஐஸ்வர்யா லட்சுமி ’தான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை மனதளவில் காதலித்ததாகவும் ஆனால் தற்போது தனக்கு கிரிக்கெட் பார்க்க நேரமில்லை என்றும் தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் அபிஷேக் பச்சன் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் என்றும் அவர் கூறினார். மேலும் எந்த கேரக்டரிலும் நடிக்க நான் தயார் என்றும் ஆனால் அதே நேரத்தில் வில்லி கேரக்டரில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com