அர்ஜூன் தாஸ் உடன் காதலா? சூப்பர் விளக்கம் அளித்த ஐஸ்வர்யா லட்சுமி!

  • IndiaGlitz, [Thursday,January 12 2023]

நேற்று அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி அதன் பின் விஷ்ணு விஷாலுடன் நடித்த ‘கட்டா குஸ்தி’ என்ற் திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த நிலையில் அவர் தற்போது தமிழ் சினிமாவின் ராசியான நடிகை ஆகிவிட்ட நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் விஜய்யின் ‘மாஸ்டர்’, கமல்ஹாசனின் ’விக்ரம்’ உள்பட சில படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்த அர்ஜூன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா லட்சுமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். மேலும் அந்த பதிவில் அவர் லவ் என்ற எமோஜியையும் பதிவு செய்திருந்ததை அடுத்த இருவரும் காதலிக்கின்றார்களா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் ஐஸ்வர்யா லட்சுமி இந்த புகைப்படத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘அர்ஜுன் தாஸுடன் நான் எடுத்த அந்த புகைப்படம் சாதாரணமானது தான். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளோம். அர்ஜுன் தாஸ் ரசிகர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் எங்கள் இருவருக்கும் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை’ என்ற பதிவு செய்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமியின் சூப்பர் விளக்கம் கொண்ட இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.