பொன்னியின் செல்வன்: ஐஸ்வர்யா லட்சுமியின் கேரக்டர் இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பத்தாம் தேதி தாய்லாந்தில் தொடங்கி தற்போது நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஜெயம்ரவி ராஜராஜசோழன் கேரக்டரிலும், கார்த்தி, வந்தியத்தேவன் கேரக்டரிலும், விக்ரம், ஆதித்த கரிகாலன் கேரக்டரிலும் நடித்து வருவதாக தெரிகிறது. மேஉம் இந்த படத்தில் விக்ரம்பிரபு, ஜெயராம், பிரபு, சரத்குமார், கிஷோர், அஸ்வின், ஐஸ்வர்யாராய், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி படகு ஓட்டும் பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவர் ’பூங்குழலி’ என்ற கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் ’பொன்னியின் செல்வன்’ நாவலில் பூங்குழலி என்ற கேரக்டர்தான் படகோட்டி பெண்ணாக வந்து ராஜராஜசோழனையே காப்பாற்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே.
எனவே ஐஸ்வர்யா லட்சுமி படகு ஓட்டும் பயிற்சி பெறுகிறார் என்றால் அவர் தான் பூங்குழலி கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இன்னும் இந்த படத்தில் யார் யார் என்னென்ன கேரக்டர்களில் நடிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout