காதலும் நட்பும்: ஐஸ்வர்யாவை தூக்கி நிறுத்த படாதபாடு படும் பிக்பாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் நிலையில் வீட்டின் உள்ளே இருக்கும் நான்கு பேரை வைத்து ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியாது என்பதால் தினமும் இரண்டு விருந்தாளிகள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று ஷாரிக் மற்றும் நித்யா வருகை தந்துள்ளனர். யாஷிகாவின் பிரிவால் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக இருக்கட்டுமே என்று ஷாரிக்கை பிக்பாஸ் அனுப்பியிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் ஷாரிக் வருகையால் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் யாஷிகாவின் பிரிவு தனக்கு அதிகமான வலியை கொடுத்ததாக ஐஸ்வர்யா, நித்யாவிடம் கூறுகிறார். இதே ஐஸ்வர்யாதான் ஷாரிக் வெளியேறிய தினம் தேம்பி தேம்பி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது
ஷாரிக் மீது ஐஸ்வர்யாவுக்கு காதல் இருந்ததாக கூறப்பட்ட போதிலும் காதலை விட தனக்கு நட்பே உயர்ந்தது என ஐஸ்வர்யாவை வசனம் பேச வைத்து அவரது இமேஜை உயர்த்த பிக்பாஸ் திட்டம் போட்டுள்ளதாகவும், என்னதான் கடைசி நாள் வரை ஐஸ்வர்யாவை நல்லவராக்க சேனலும், பிக்பாஸும் முயன்றாலும் நாங்கள் ஏமாற மாட்டோம் என்றும் ரித்விகாவை ஜெயிக்க வைக்காமல் ஓயமாட்டோம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். எனவே ஐஸ்வர்யாவை தூக்கி நிறுத்த படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் எண்ணம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்
என்னம்மா அங்க சத்தம் ???? #BiggBossTamil - இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/jSdy0PF0BN
— Vijay Television (@vijaytelevision) September 25, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments