ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒலிம்பிக் சாதனையாளரின் படம்

  • IndiaGlitz, [Sunday,January 01 2017]

புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு படங்கள் அவ்வப்போது பாலிவுட்டில் வெளிவந்து வெற்றி பெற்று வருவதை பார்த்து வருகிறோம். மேரிகோம், தோனி, தங்கல் ஆகிய படங்கள் இதற்கு நல்ல உதாரணம். விரைவில் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் உலக அளவில் பிரபலமான தமிழக விளையாட்டு வீரர்கள் குறித்து யாராவது திரைப்படம் எடுக்க மாட்டார்களா? என்று தமிழ் ரசிகர்கள் ஏங்கி வந்த நிலையில் தமிழர்களின் ஆசையை பூர்த்தி செய்ய தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா களமிறங்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கப்பதக்கம் கூட கிடைக்காத ஏக்கத்தை பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்று பூர்த்தி செய்தவர் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாரியப்பன் தனது மன உறுதியாலும், விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். இவருடைய வாழ்க்கை வரலாறு படத்தைத்தான் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவுள்ளார். ஏற்கனவே இவர் '3', 'வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே

தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு சீன்ரோல்டன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் மாரியப்பன் கேரக்டரில் நடிப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சசிகலாவுடன் சிவாஜி குடும்பத்தினர் சந்திப்பு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் வகித்து வந்த சக்தி வாய்ந்த பதவியான...

முதல்முறையாக அரசும் மக்களும் ஒரே திசையில் பயணம். பிரதமர் நரேந்திர மோடி உரை

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி உயர்மதிப்பு கொண்ட ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த...

'கபாலி' இயக்குனரின் புதிய அவதாரம்

'அட்டக்கத்தி', மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கி கோலிவுட்டின் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய பா.ரஞ்சித்...

இளையதளபதி விஜய்யின் 'பைரவா' டிரைலர் விமர்சனம்

2017ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பு புத்தாண்டு விருந்தாக வெளிவந்துள்ளது இளளயதளபதி விஜய்யின் 'பைரவா' டிரைலர்

அனிருத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'ரெமோ' கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி...