போன வருடம் பரதம், இந்த வருடம் பாட்டு: ஐஸ்வர்யா தனுஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் பல்திறமை கொண்டவர் என்பது தெரிந்ததே. குடும்பம், குழந்தைகளை கவனித்து கொண்டே அவர் திரைப்படம் இயக்குவது உள்பட பல்வேறு கலைப்பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு உலக மகளிர் தினத்தன்று ஐக்கிய நாட்டு சபையில், ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் இதன்மூலம் பெற்றார். அதேசமயம் அவருடைய நடனம் சமூக வலைத்தளங்களால் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வருட மகளிர் தினத்தில் பரதம் ஆடிய ஐஸ்வர்யா, இந்த வருட மகளிர் தின ஸ்பெஷலாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். இளையராஜாவின் மகளும், யுவன்ஷங்கர் சகோதரியுமான பவதாரிணி இசையில் உருவான மகளிர் தின பாடலை ஐஸ்வர்யா தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு சமூக வலைத்தள பயனாளிகளின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments