ஐஸ்வர்யாவை கதறவிட்ட விஜயலட்சுமி

  • IndiaGlitz, [Monday,September 03 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதியதாக இணைந்துள்ள விஜயலட்சுமி சக போட்டியாளர்களுக்கு நல்ல போட்டியை ஏற்படுத்துவார் என்பது முதல் நாளில் இருந்தே தெரிந்துவிட்டது. எனவே தான் அவர் இந்த டைட்டிலை வெற்றி பெறக்கூடாது என்று பலர் கமலிடம் முறையிட்டனர். குறிப்பாக ஐஸ்வர்யா, யாஷிகாவுக்கு எதிராக காயை நகர்த்துவதில் விஜயலட்சுமி ஈடுபட்டு வருகிறார்.

விஜயலட்சுமி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மக்களின் மனநிலையை தெரிந்து கொண்டு உள்ளே சென்றுள்ளதால் முதல் நாளிலேயே கமலிடம் 'யாஷிகா' தனக்குக் நெகட்டிவ்வாக தெரிவதாகவும், ஐஸ்வர்யா இன்னொருவரை நம்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் 'ஐஸ்வர்யா, மும்தாஜ் மற்றும் செண்ட்ராயன் முன் தனியறையில் விஜயலட்சுமி கூறும்போது, 'உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் பற்றி தெரியாது. அவர்கள் எல்லோரையும் அரவணைத்து செல்வார்கள். பிடித்துவிட்டால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், ஆனால் முட்டாள்கள் இல்லை என்று கூறுகிறார்.

இதனை கேட்டு ஐஸ்வர்யா கதறி அழ, அவரை யாஷிகா வழக்கம்போல் தேற்றுகிறார். பிக்பாஸ் டைட்டிலை வெல்ல ஐஸ்வர்யா, யாஷிகா போட்ட திட்டங்கள் எல்லாம் விஜயலட்சுமியால் தவிடுபொடியாகும் என தெரிவதால் இருவரும் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது.