எல்லோரும் என்னை டார்கெட் பண்றிங்க: ஐஸ்வர்யா ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் கடுமையாக உள்ளது. உடல் மற்றும் மன வலிமையை சோதிக்கும் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 'ஞாபகம் வருதே' டாஸ்க்கை தவிர நேர்மையாக ஒரு டாஸ்க்கையும் செய்யாமல் இருக்கும் ஐஸ்வர்யா, தான் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்கை சரியாக செய்து வருவதாக விஜியிடம் வாதாடுகிறார். விஜியும் அவருக்கு பதிலடி கொடுக்க, யாஷிகா தவிர அனைவரும் விஜிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
யாஷிகா கடந்த சில நாட்களாக தனக்காக விளையாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால் அவர் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. இதனால் எல்லோரும் சேர்ந்து என்னை டார்கெட் பண்றிங்க, அது உங்களால் முடியாது என்று ஆவேசமாக பேசுகிறார் ஐஸ்வர்யா.
என்னதான் டாஸ்க்கில் கள்ளாட்டம் ஆடி ஜெயித்தாலும் மக்கள் ஓட்டு போட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் அதே நேரத்தில் மக்கள் வாக்குகளை நேர்மையாக பிக்பாஸ் கடைபிடிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்டி பண்ணீங்க?! ???? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/rgJ8zo5EHk
— Vijay Television (@vijaytelevision) September 19, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout