எல்லோரும் என்னை டார்கெட் பண்றிங்க: ஐஸ்வர்யா ஆவேசம்

  • IndiaGlitz, [Wednesday,September 19 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் கடுமையாக உள்ளது. உடல் மற்றும் மன வலிமையை சோதிக்கும் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 'ஞாபகம் வருதே' டாஸ்க்கை தவிர நேர்மையாக ஒரு டாஸ்க்கையும் செய்யாமல் இருக்கும் ஐஸ்வர்யா, தான் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்கை சரியாக செய்து வருவதாக விஜியிடம் வாதாடுகிறார். விஜியும் அவருக்கு பதிலடி கொடுக்க, யாஷிகா தவிர அனைவரும் விஜிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

யாஷிகா கடந்த சில நாட்களாக தனக்காக விளையாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால் அவர் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. இதனால் எல்லோரும் சேர்ந்து என்னை டார்கெட் பண்றிங்க, அது உங்களால் முடியாது என்று ஆவேசமாக பேசுகிறார் ஐஸ்வர்யா.

என்னதான் டாஸ்க்கில் கள்ளாட்டம் ஆடி ஜெயித்தாலும் மக்கள் ஓட்டு போட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் அதே நேரத்தில் மக்கள் வாக்குகளை நேர்மையாக பிக்பாஸ் கடைபிடிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பரட்டை,சப்பாணியை விரட்டியடிப்பார் இளையதளபதி: திமுக எம்.எல்.ஏ

அதிமுக அரசுக்கு எதிராக நேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாகும் எம்.ஜி.ஆர் படம்

எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்த 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' திரைப்படம் தற்போது அனிமேஷனில் தயாராகி வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

'இரும்புத்திரை' இயக்குனரின் அடுத்த படத்தில் மாஸ் நடிகர்

சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் செய்யப்படும் மோசடி குறித்து பாமரர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த படம் இருந்தது

பிக்பாஸ் டாஸ்க்: முதலிடத்தை பிடித்த ஐஸ்வர்யா-யாஷிகா

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நேற்று இரண்டு விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டது.

கமல் பாணியில் களமிறங்கும் விஷால்

நடிகர் சங்க பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்கும்போதும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும்போது கமல்ஹாசனின் ஆதரவை பெற்ற நடிகர் விஷால் அவரது பாணியில் அரசியல் அமைப்பு