ரஜினியால் தான் 'லால் சலாம்' தோல்வி அடைந்ததா? ஐஸ்வர்யா சொல்வது என்ன?
- IndiaGlitz, [Thursday,March 07 2024]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றும் வசூல் அளவில் இந்த படம் தோல்வி படம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டி அளித்த போது ஆரம்பத்தில் ’லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டர் வெறும் 10 நிமிடம் மட்டுமே வரும் வகையில் திரைக்கதை அமைத்திருந்தோம், ஆனால் ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் என்ட்ரி ஆனவுடன் அவரை சுற்றி கதை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இந்த படத்தின் கதை செந்தில் ஐயாவை சுற்றி தான் வரும், அவர்தான் இந்த படத்தில் உள்ள கருத்துக்களை மக்களிடம் போய்க் கொண்டு சேர்க்கும் கேரக்டராக இருந்தார், ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற கேரக்டர் உள்ளே வந்த பிறகு அவரை மையப்படுத்தி தான் படத்தை திரைக்கதையை மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று ஐஸ்வர்யா தெரிவித்தார்
மேலும் இந்த படத்தில் இன்டர்வெல் சீன் போதுதான் மொய்தீன் பான் கேரக்டர் வரும் வகையில் நாங்கள் வடிவமைத்திருந்தோம். ஆனால் சில கமர்சியல் விஷயங்களுக்காக அந்த கேரக்டரை முன்கூட்டியே கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு படத்தின் ரிலீஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு மொய்தீன் பாய் கேரக்டரை எப்படி முன்னாடி கொண்டு வரலாம் என்பதை யோசித்து நாங்கள் முன்கூட்டியே அவரை கொண்டு வந்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு தலைவர் என்ற கேரக்டரை உள்ளே கொண்டு வந்த பிறகு நான் சொல்ல வந்த கதையை மக்கள் பார்க்கவில்லை, அவரை பார்க்க வேண்டும், அவரை சுற்றி தான் கதை நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த படத்தில் இருந்து நான் கற்றுக் கொண்டது இதுதான் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தின் முதல் பாதி நான்லீனியர் டைப்பில் நான் எடுத்து இருந்ததால் பலருக்கு கதை புரியவில்லை, ஆனால் இரண்டாம் பாதியை பார்க்கும்போது அதை புரிந்து கொள்வார்கள் என்றும் கணித்திருந்தேன். ஆனால் ஆடியன்ஸ் முதல் பாதியை வேறு விதமாகவும் இரண்டாம் பாதியை வேறு விதமாகவும் பார்த்திருக்கிறார்கள் என்பதை படம் வெளியான பின்னர் தான் புரிந்து கொண்டேன்.
மேலும் இந்த படத்தில் எந்த அளவுக்கு எனக்கு நெகட்டிவ் விமர்சனம் வந்ததோ, அதே அளவுக்கு பாசிட்டிவ் விமர்சனமும் வந்தது, இரண்டையும் நான் சமமாக எடுத்துக் கொண்டேன், இந்த படத்தில் இருந்து சில பாடங்களை நான் கற்றுக் கொண்டேன், இனிவரும் படங்களில் அந்த தவறுகளை செய்ய மாட்டேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தில் வந்ததால் தான், நான் சொல்ல வந்த விஷயம் மக்களிடம் போய் சேரவில்லை’ என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளதால் இந்த படத்தின் தோல்விக்கு ரஜினியும் ஒரு காரணம் என இந்த பேட்டியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.