ஒவ்வொரு வருடமும் ரூ.10 லட்சம் நிதியுதவி.. ரஜினிகாந்த் மகள் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வருடமும் இயக்குனர் சங்கத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி இருப்பதை அடுத்து அவருக்கு இயக்குனர் சங்கத்தின் உறுப்பினர் நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் சங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவி பெறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி தருவதாக கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட தொகை ரூபாய் 5 லட்சத்தை இயக்குனர் சங்கத் தலைவர் ஆர் வி உதயகுமாரிடம் வழங்கியுள்ளார்.
இது குறித்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பேரரசு, சரண், ஆர் கே செல்வமணி, எழில், மித்ரன் ஜவகர், ரங்கநாதன், எஸ் ஆர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கத்திற்கு நிதி உதவி வழங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு செயற்குழு உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
என்னுடைய உதவி இயக்குனர்களின் குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு நான் உதவி செய்தேன். உடனே மற்ற உதவி இயக்குனர்கள் மத்தியிலும் இந்த தகவல் பரவி நிறைய அழைப்புகள் வர ஆரம்பித்தது. இவற்றில் எது சரியான உதவி என்பது எனக்கு தெரியவில்லை என்பதால் அதற்கென இருக்கும் இயக்கத்தின் மூலம் உதவி செய்யலாம் என்று முடிவு செய்து தான் இயக்குனர் சங்கத்திற்கு இந்த நிதியை கொடுத்துள்ளேன் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout