விவாகரத்து மனு தாக்கல் செய்த கையோடு தனக்காக  ஐஸ்வர்யா  ரஜினிகாந்த் செய்த முடிவு..!

  • IndiaGlitz, [Wednesday,May 01 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனுவை ஏற்றுக் கொண்ட குடும்ப நல நீதிமன்றம் இருவரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் தனக்கென எடுத்த முடிவு குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’3’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில் அதன் பின்னர் அவர் ’வை ராஜா வை’ ’லால்சலாம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில் அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அவர் தனுஷை சட்டரீதியாக விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்பதும் இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தனுஷ் ,ஐஸ்வர்யா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தனுஷை விட்டு பிரிந்த பின்னர் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஐஸ்வர்யா தற்போது தனக்கென ஒரு புதிய வீடு வாங்கி இருப்பதாகவும் அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிரகப்பிரவேசத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இந்த கிரகப்பிரவேசத்தில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.