மீண்டும் விளையாட்டு வீராங்கனை வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
- IndiaGlitz, [Wednesday,February 20 2019]
ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்த 'கனா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷின் கடுமையான உழைப்பு இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரங்களில் ஒன்று.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவர் குத்துச்சண்டை வீராங்கனையாக அந்த படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தூள்ளது.
இந்த படம் தெலுங்கில் உருவாகி வந்தாலும் தமிழிலும் டப் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயசங்கர் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் மட்டுமின்றி ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்த படம் என கூறப்படுகிறது. இந்த படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கிராமத்து பெண்மணியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.