தாயாக நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை...! பிரபல நடிகை கூறிய பதில் ....!

  • IndiaGlitz, [Saturday,August 21 2021]

தனக்கு தாயாக நடிப்பதில் எந்த தயக்கமோ, பிரச்சனையோ இருந்ததில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஓடிடி-யில் வெளியான திட்டம் இரண்டு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலான பாராட்டைப் பெற்றது. இயக்குனர் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பில், நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் நாளை வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் பூமிகா. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி-தளத்தில் வெளியாக உள்ளது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,
நான் பூமிகா படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளேன். இதுபோன்று முக்கிய கதாபாத்திர அம்சமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அம்மா கேரக்டராக நடிப்பதற்கு எனக்கு எந்த தயக்கமும், பிரச்சனையும் இல்லை. இப்படத்தை பார்ப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு செடியாவது வளர்க்க வேண்டும் என நினைப்பார்கள் என்று தெரிவித்தார்.

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.