மியா ஜார்ஜை அடுத்து 'விஜய் 60'-ல் இணையும் இன்னொரு நடிகை

  • IndiaGlitz, [Tuesday,January 12 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் விஜய்யின் 60வது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நடிகைகளை தேர்வு செய்வதில் இயக்குனர் பரதன் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க மியா ஜார்ஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷிடம் இயக்குனர் பரதன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அவரது காஷீட் குறிப்பிட்ட தேதியில் இல்லையென்றால் வேறு நாயகியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.