'சர்வம் தாளமயம்' 2வது சிங்கிளை வெளியிடும் சர்வதேச பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி மற்றும் வெளியிடும் பிரபலம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை கடந்த 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்று சர்வதேச அளவில் புகழ் பெற்றவரும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார். ராஜீவ் மேனன் இயக்கிய 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
Yes And the wait is over..??
— G.V.Prakash Kumar (@gvprakash) December 5, 2018
It's our favorite "Aishwarya Rai" who will release our Second Single from #SarvamThaalaMayam tomorrow by 6PM..
Can't wait to hear it ????#SarvamThaalaMayam#SarvamThaalaMayamSecondSingle pic.twitter.com/XC2TqlkNlk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com