'தக்லைஃப்' படத்தில் இணைகிறாரா ஐஸ்வர்யாராய்? அப்ப த்ரிஷா யாருக்கு ஜோடி?

  • IndiaGlitz, [Thursday,January 11 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களின் தகவல்கள் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் இணைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று கௌதம் கார்த்திக் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் இணைந்தனர் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ’இருவர்’ ’குரு’ ’பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்தில் இணைகிறார் என்பதும் கமல்ஹாசனுடன் முதல் முதலாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கமலஹாசன் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும், ஜெயம் ரவிக்கு ஜோடி த்ரிஷா என்றும் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்த இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'கங்குவா' படத்தின் வெறித்தனமான அப்டேட் கொடுத்த சூர்யா.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் வெறித்தனமான அப்டேட்டை சூர்யா

பேட்ஸ்மேன், பெளலரை விட எனக்கு ஆல்ரவுண்டர் தான் ரொம்ப பிடிக்கும்: 'ப்ளூ ஸ்டார்' டிரைலர்..!

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்த 'ப்ளூ ஸ்டார்' என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்

இந்த சீசனே வேஸ்ட்.. மாயாவிடம் கூறிய ஜோவிகா .. அப்செட் ஆன தினேஷ்..!

நீங்க மட்டும் இந்த சீசனில் இல்லை என்றால் இந்த சீசனே வேஸ்ட் என்று கூறிய ஜோவிகா, நீங்கள் அர்ச்சனாவிடம் நெருங்கி பழகுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திரைப்படத்தில் நடிக்கிறாரா 'சிறகடிக்க ஆசை' நடிகர்? முத்துவுக்கு கூட கிடைக்காத வாய்ப்பு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை'என்ற சீரியல் மிகப்பெரிய அளவில்  மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவருமே தங்களது

கமல்ஹாசனின் 'தக்ஃலைப்' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்:ராஜ்கமல் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தக்ஃலைப்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் இணைந்தனர் என்பதை