ஐஸ்வர்யாராய் எனது அம்மா! 29 வயது இளைஞரின் அதிர்ச்சி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

நம்மூரில் ஒரு வயதான தம்பதி, நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறியதோடு நீதிமன்றம் வரை சென்ற நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யாராய் அவர்கள் தான் எனது தாயார், நான் அவருடன் வாழ விரும்புகிறேன்' என்று 29 வயது இளைஞர் ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திராவை சேர்ந்த 29 வயது சங்கீத்ராய்குமார் என்பவர் திடீரென செய்தியாளர்களை சந்தித்து, தான் ஐஸ்வர்யாராயின் மகன் என்றும் தன்னை அவர் செயற்கை கருத்தரித்தல் முறையில் லண்டனில் கடந்த 1988ஆம் ஆண்டு பெற்றெடுத்ததாகவும் கூறியுள்ளார்.

1988ஆம் ஆண்டு பிறந்த தான், மூன்று வயது வரை  மும்பையில் தன்னுடைய பாட்டி பிருந்தா ராய் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகவும், தனது தாத்தா கிருஷ்ணராஜ் ராய் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானதாகவும் கூறியுள்ளார். கிருஷ்ணராஜ், பிருந்தாராய் ஆகியோர் ஐஸ்வர்யாராயின் பெற்றோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

27 ஆண்டுகள் தன்னுடைய தாயாரை பிரிந்து வாழ்வதாகவும், மீதி நாட்களில் அவருடன் வாழ ஆசைப்படுவதாகாவும், அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் தான்  ஐஸ்வர்யாராய் மகன் என்பதை நிரூபிக்க தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் கூறியபடி பார்த்தால் ஐஸ்வர்யாராய், உலக அழகி பட்டத்தை வெல்லும் முன்பே தன்னை பெற்றெடுத்ததாக கூறுகிறார். கடந்த 1973ஆம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யாராய், 1994ஆம் ஆண்டு தான் தன்னுடைய 21வயது வயதில்தான் உலக அழகி பட்டத்தை வென்றார். உலக அழகி பட்டத்திற்கு முன்பே அதாவது 15 வயதில் ஐஸ்வர்யாராய் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றார் என்று கூறியிருப்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

More News

அரசியல் கட்சி தொடங்க ஆசி பெற்றேன்: கருணாநிதியை சந்தித்த பின் ரஜினி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் நிலை குறித்த அறிவிப்பை அறிவித்த நிலையில் சற்று முன்னர் திமுக தலைவரும் முதுபெரும் அரசியல் தலைவருமான மு.கருணாநிதியை சந்தித்தார்.

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினியின் அடுத்த முக்கிய அறிவிப்பு

ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழாவின்போது ரஜினியின் '2.0' படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி

சீயான் விக்ரம் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கிய 'ஸ்கெட்ச்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரும்

கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய விஜய்சேதுபதி படக்குழு

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளது.

கலியுக வரதன் வந்துவிட்டார், கல்கி அவதாரம் வந்துவிட்டது: கமல் குறிப்பிடுவது யாரை?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் பணி காரணமாக தற்காலிகமாக டுவிட்டர் அரசியலுக்கு இடைவெளி கொடுத்துள்ளார்.