2.0 படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளாரா?

  • IndiaGlitz, [Wednesday,April 04 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடியும் காலம் சரியாக தெரியாததால் ரிலீஸ் தேதியும் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது

இந்த படத்தில் ரஜினிகாந்த் முதல் பாகத்தில் நடித்தது போலவே விஞ்ஞானி வசீகரன் மற்றும் ரோபோ சிட்டியாக நடித்துள்ளார். சிட்டியின் காதலியாகவும் ரோபோவாகவும் எமிஜாக்சன் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்சயகுமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் 'எந்திரன்' படத்தின் ஒரிஜினல் இரண்டாம் பாகம் என்பதால் முதல் பாகத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யாராய் ஒருசில காட்சிகளில் இந்த படத்தில் தோன்றுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த தகவல் உண்மையா? அப்படியே உண்மையாக இருந்தாலும் இந்த படத்திற்காக பிரத்யேகமாக ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டதா? அல்லது முதல் பாகத்தில் எடுத்த காட்சிகளில் சில இந்த படத்தில் இணைக்கப்பட்டதா? என்பது குறித்து படம் வெளிவந்த பின்னர்தான் உறுதியாக சொல்ல முடியும்

More News

காவிரிக்காக ஐபிஎல் போட்டியை தடை செய்யலாமா?: ஆதரவும் எதிர்ப்பும்

காவிரி பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும்போது ஐபிஎல் போட்டி ஒரு கேடா? என்றும், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்

ஐபிஎல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம்: தமிழக எம்.எல்.ஏ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஐபிஎல் போட்டியை நடத்தவிடமாட்டோம் என்றும் மீறி நடத்தினால் கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மு.தமீமுன் அன்சாரி கூறியுள்ளார்.

திருச்சியில் இறங்கியது கமல் செய்த முதல் மனிதாபிமான செயல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று அவர் சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சி சென்றார்.

காவிரிக்காக ஐபிஎல் போட்டியை உதறிய வர்ணனையாளர்

காவிரி பிரச்சனை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டிய நேரம் இதுதான் என்பதை சரியாக புரிந்து கொண்ட தமிழக மக்கள்

வைகோ குற்றச்சாட்டுக்கு சீமான் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சீமான் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை பத்திரிகையாளர்கள் முன்வைத்து ஆவேசமாக பேசினார். தன்னை பற்றி ஜாதிரீதியாக மீம்ஸ் போடுவதாகவும், ஸ்டெர்லைட்