'பொன்னியின் செல்வன்' படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது
'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ’நந்தினி’ கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள புதிய செய்தியின்படி ஐஸ்வர்யாராய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் நந்தினி கேரக்டர் மட்டுமின்றி நந்தினியின் தாயாரான மந்தாகினி தேவி என்ற ஊமை ராணி கேரக்டரிலும் அவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த படம் ஐஸ்வர்யாராய் திரையுலக வாழ்வில் இதுவொரு மறக்க முடியாத படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பொன்னியின் செல்வன்’ படத்திற்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளதாகவும் ரவிவர்மன் ஒளிப்பதிவில் தோட்டாதரணி கலை இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படம் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய படமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments