பிரபல கவிஞர் எழுதிய கதையில் நடிகை ஐஸ்வர்யா ராய்… வைரல் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் உருவாக இருக்கும் 3 ஹீரோயின்களை மையப்படுத்திய திரைப்படம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தின் கதை தேசிய கீதம் பாடிய பிரபல கவிஞர் ரவீந்திரநாத் தாகூருடையது என்பதும் சிறப்புக்குரியதாகக் பார்க்கப்படுகிறது.
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “இருவர்“ எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்குப் பிறகு ஒருசில தென்னிந்திய திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் பாலிவுட் சினிமாவே அருடைய களமாக இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “எந்திரன்“ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான “பொன்னியின் செல்வன்“ திரைப்படத்தில் இணைந்து லீட் ரோலான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2 பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல்பாகம் அடுத்த வருடம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டில் 3 ஹீரோயின்களை மையப்படுத்திய கதை ஒன்று திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இஷிதா கங்குலி என்பவர் இயக்கவுள்ள இந்தக் கதையின் ஒரு ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மறைந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் “3 வுமன்“ எனும் கதையை எழுதியிருந்தார். இந்தக் கதையைத் தழுவித்தான் தற்போது பாலிவுட்டின் புது திரைப்படம் உருவாக இருக்கிறது. அதில் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com