பிரெஞ்ச் அதிபருடன் மதிய விருந்தில் கலந்து கொள்ளும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,January 26 2016]

இன்று நாடு முழுவதும் 67வது குடியரசு தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் அணிவகுப்பு முடிந்தவுடன் அவருக்கு மதிய விருந்து அளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் மதிய விருந்தில் பிரெஞ்ச் அதிபருடன் கலந்து கொள்ள முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாராய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை பிரெஞ்சு தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியர் விடுத்துள்ளார்.

தற்போது ஓமங் குமாரின் இயக்கத்தில் உருவாகி வரும் சர்ப்ஜித்' என்ற படத்தின் படப்பிடிப்பில் பிசியாக கலந்து கொண்டு வரும் ஐஸ்வர்யாராஜ், இந்த மதிய விருந்துக்காக சிலமணி நேரம் நேரம் ஒதுக்கி, விருந்தில் கலந்து கொள்ளவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News

நயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்த முந்தைய படங்களான 'மாயா' மற்றும் 'நானும் ரவுடிதான்' ஆகிய திரைப்படங்கள் ....

ஏ.ஆர்.முருகதாஸ்-ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் அதர்வா

அதர்வா நடித்த ஒருசில படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததை அடுத்து அவரையும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது 'ஈட்டி' என்ற சூப்பர் ஹிட் திரைப்படம்....

பத்ம விபூஷன் விருது. ரஜினிக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பத்ம விபூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே....

பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்ற திரை நட்சத்திரங்கள்

'பாகுபலி' என்ற உலகப்புகழ் பெற்ற படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது...

IIFA விருதுகளை அள்ளிய 'பாகுபலி' மற்றும் 'தனி ஒருவன்'

IIFA என்று கூறப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது...