வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐஸ்வர்யாராய், மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராதித்யா ஆகிய இருவருக்கும் லேசாக கொரோனா பாதிப்பு மட்டுமே இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா வீட்டில் தனிமைப்படுத்தப் கொண்டிருந்த நிலையில் திடீரென நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் சிகிச்சை பெற்று வரும் அதே மும்பை நானாவதி மருத்துவமனையில்தான் ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராதித்யா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவருக்கும் கொரோனாவின் அறிகுறி சற்று அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது அவர்கள் இருவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மும்பை நானாவதி மருத்துவமனையில் தற்போது அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராதித்யா ஆகிய நால்வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், அமிதாப் மனைவி ஜெயாபச்சனுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா பாதிப்புக்கு பின் 'பிகில்' படத்தை ரீரிலீஸ் செய்யும் 4வது நாடு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது என்பதும் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் படிப்படியாக திரையரங்குகள் திறக்கப்பட்டு வருகிறது

தமிழகத்தில் இன்று அதிகபட்ச பலி எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதிலும் கடந்த மாதம் வரை பலி எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால்

மும்பையில் 4 வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்த முதிய பெண்: கொலை செய்த மருமகள்

மும்பையில் ஒரே ஒரு வீடு இருந்தாலே பணக்காரர் என்ற நிலையில் நான்கு வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்து வந்த முதிய பெண் ஒருவரை அவரது மருமகளே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம்

HCL நிறுவனத்தின் தலைவராகும் இந்தியாவின் பணக்காரப் பெண்!!!

HCL நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் ஷிவ் நாடார் வருகிற 17 ஆம் தேதி தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

லட்டு பிடிக்கிறவரையும் இந்த கொரோனா விட்டு வைக்கல… திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட பரபரப்பு!!!

உலகத்துக்கே படியளுக்குற ஏழுமலையான் கோவிலில் தற்போது கொரோனா தாண்டவமாடத் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.