அமிதாப் குடும்பத்தின் இருவர் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் வாழ்த்து

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதன் பின் ஒரு சில நாட்கள் கழித்து ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களும் ஓரிரு நாட்களுக்கு பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

மும்பை நானாவதி மருத்துவமனையில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நால்வரும் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவர் மட்டும் கொரனோ பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தற்போது அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் அவர்களும் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

More News

டிக்டாக் தடையோடு கணக்கு முடியல… பப்ஜி உள்ளிட்ட பெரிய லிஸ்டே இருக்கு… பரபரப்பு தகவல்!!!

கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருந்து வரும் எல்லைப் பிரச்சனையில் இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை

கொரோனா பரவல் தடுப்பு: அரிசியோடு சேர்த்து மாஸ்க் வழங்கும் தமிழக அரசு!!!

கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்துக் குடிமக்களுக்கும் இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அடுத்த அமெரிக்க அதிபர் இவர்தான்… கருத்துக் கணிப்பில் வெளியான சுவாரசியத் தகவல்!!!

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவிலும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது.

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி: விரக்தியில் சென்னை கல்லூரி மாணவர் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் சென்னை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்: காவல்துறை அதிரடி நடவடிக்கை

கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க முருக பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.