close
Choose your channels

விஜய்சேதுபதி படத்தை இயக்குகிறாரா ரஜினி மகள்?

Tuesday, November 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தின் சூப்பர் ஹிட்டை அடுத்து அதன் தயாரிப்பாளர் தனுஷ் மீண்டும் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை அவருடைய மனைவியும், 'வை ராஜா வை' பட இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இதுகுறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா, 'விஜய்சேதுபதியின் அடுத்த படத்தை தனுஷ் தயாரிப்பது உண்மைதான். ஆனால் அந்த படத்தை நான் இயக்குகிறேன் என்று வெளிவந்த செய்தியில் சிறிதும் உண்மையில்லை. நான் என்னுடைய அடுத்த படத்திற்கான ஸ்கிர்ப்டை தயார் செய்து வருகிறேன். விரைவில் என்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே தனுஷ்-விஜய்சேதுபதி இணையும் திரைப்படம் 'பிரேமம்' படத்தின் ரீமேக் இல்லை என்று தனுஷ் தரப்பு விளக்கியுள்ள நிலையில், தற்போது ஐஸ்வர்யா இயக்கவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. எனவே இந்த படத்தை இயக்குவது யார்? என்ன கதை? என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment