பாலி தீவு அருவியில் ஆனந்த குளியல்.. பொன்னியின் செல்வன் நடிகையின் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,August 31 2023]

மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்குள்ள அருவியில் ஆனந்த குளியல் போட்ட வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ’

விஷால் நடித்த ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதன் பிறகு தனுஷின் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் நடித்த அவர் ’பொன்னின் செல்வன்’ படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரின் மூலம் பிரபலமானார். அதுமட்டுமின்றி விஷ்ணு விஷாலுடன் ’கட்டா குஸ்தி’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் தனது தோழிகளுடன் பாலி தீவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்கிருந்தபடியே எடுத்த இயற்கை எழில் கொஞ்சம் காட்சிகளின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் அங்குள்ள அருவியில் ஆனந்தமாக குளியல் போடும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

More News

இந்த சீசன் இரண்டு வீடுகள் மட்டுமல்ல, இதுவும் இரண்டு தான்.. களைகட்டும் பிக்பாஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 7வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமாண்டத்தின் உச்சம்.. பிரமிக்கும் ஆக்சன் காட்சிகள்: அட்லியின் 'ஜவான்' டிரைலர்..!

 ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது

சிலந்தி வலையை அறுக்க சிங்கங்கள் வாழாது.. கவினின் 'ஸ்டார்' படத்தின் செம்ம வீடியோ..!

நடிகர் கவின் நடித்து வரும் 'ஸ்டார்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இன்ஸ்டாவுக்கு அதிரடியாக வந்த நயன்.. முதல்முறையாக குழந்தைகளுடன் செம்ம ஸ்டைல்..!

நடிகை நயன்தாரா இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் இல்லாத நிலையில் முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கியுள்ளார். இதில் அவர் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை

எந்த ஒரு விஜய் ரசிகனும் கொடுத்த வாக்கை மீறமாட்டான்: 'ஜவான்' விழாவில் அட்லீ..!

ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் 'ஜவான்' திரைப்படத்தின் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.