தனுஷ் உடனான பிரிவை உறுதி செய்தாரா ஐஸ்வர்யா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் பிரபல நடிகர் தனுஷ் ஆகிய இருவரும் 18 ஆண்டுகால தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் திடீரென பிரிவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் இரு தரப்பு பெற்றோர்களும் அவர்களை மீண்டும் இணைத்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ அதிக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
மேலும் இருவருமே இதுவரை அதிகாரபூர்வமாக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஐஸ்வர்யாவின் மியூசிக் வீடியோவின் டைட்டிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று அவர் பதிவு செய்துள்ளதை, அவர் தனுஷுடன் ஆன பிரிவை அவர் உறுதி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ படங்களின் டைட்டிலில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற டைட்டில் போடப்பட்ட நிலையில் தற்போது இந்த மியூசிக் வீடியோவில் மட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று டைட்டில் போடப்பட்டுள்ளதே இந்த சந்தேகத்திற்கு காரணமாக உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் ஐஸ்வர்யா இன்னும் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ஐஸ்வர்யா தனுஷ் என்றே வைத்துள்ளார் என்பதால் நிரந்தமாக பிரிவார்களா? அல்லது மீண்டும் இணைவார்களா? என்பதை கணிக்க முடியாத அளவில் உள்ளது என கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments