இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம், பழைய ஐஷு தான் வேணும்: அம்மாவின் எமோஷனல் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு கட்டத்தில் நிக்சன் எல்லை மீறும் போது கூட அமைதியாக இருந்த ஐஷு , பெண்கள் பாதுகாப்பு என்று குற்றம் சாட்டிய மாயா குரூப்பிற்கு ஆதரவாக, பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பிறகு முழுக்க முழுக்க மாயா, பூர்ணிமா கேங்கின் கட்டுப்பாட்டுக்குள் ஐஷு வந்து விட்டதால் அவர் தனது தனித்தன்மையை இழந்ததாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐஷு அம்மா தனது சமூக வலைதளத்தில் எமோஷனலாக ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில் ’எல்லாவற்றையும் உணர்ந்து நீ, நீயாகவே இருக்க வேண்டும் ஐஷு, இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம், நாங்கள் எங்களுடைய ஐஷுவை தான் விரும்புகிறோம், உண்மையான கண்கள் எது? பொய்யான கண்கள் எது? என்பதை நீ உணர்வாய் என நம்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார்
இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments