நிக்சன் எவிக்சனால் ஐஷு தந்தைக்கு என்ன ஒரு சந்தோஷம்.. இன்ஸ்டா பதிவு வைரல்..!
- IndiaGlitz, [Sunday,December 31 2023]
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நிக்சன் மற்றும் ரவீனா வெளியேறப்போவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நிக்சன் வெளியேற்றம் குறித்து ஐஷு தந்தை தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள சந்தோஷமான பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் ஐஷுவிடம் நிக்சன் நடந்து கொண்ட விதம் அவரது குடும்பத்தினரை பெரும் அளவு பாதித்தது என்பதும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் ஐஷு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த சோகமான பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம். அதன் பிறகு ஐஷு எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்காமல், சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக இல்லாமல் உள்ளார்.
இந்த நிலையில் இன்று நிக்சன் மற்றும் ரவீனா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ள நிலையில் ஐஷு தந்தை தனது சமூக வலைத்தளத்தில் ’ஸ்பைடர்’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா பிறருடைய மரண ஓலம் கேட்டு மகிழ்ச்சியடையும் புகைப்படத்தை பதிவு செய்து, ‘நான் ஒரு காரணத்திற்காக சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று நிக்சனின் எலிமினேஷனை மறைமுகமாக பதிவு செய்துள்ளார்.
இதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் நிக்சன் எலிமினேட் ஆனதை ஐஷு தந்தை கொண்டாடுகிறார் என்றும் இந்த பதிவு அதைத்தான் குறிப்பிடுகிறது என்றும் கூறி வருகின்றனர்.