உன் மேல எனக்கு ஃபீலே வரவில்லை.. நிக்சனுக்கு ஷாக் கொடுத்த ஐஷு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வரும் நிலையில் இந்த சீசனின் காதல் ஜோடி நிக்ஸன் மற்றும் ஐஷு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐஷுவிடம் நிக்சன் எல்லை மீறும் பல காட்சிகளை பார்த்து பார்வையாளர்கள் முகம் சுளித்தனர்.
குறிப்பாக ஒரே தட்டில் சாப்பிடுவது, கண்ணாடிக்கு பின் நின்று முத்தம் கொடுப்பது, பெட்டில் படுத்து இருக்கும் ஐஷுவை காலை பிடித்து இழுப்பது ஆகியவை சக போட்டியாளர்களுக்கு அருவருப்பாக இருந்தது.
இந்த நிலையில் தனது பெயர் டேமேஜ் ஆவதை புரிந்து கொண்ட ஐஷு, நிக்ஸ்னிடம் விளக்கம் அளிக்கிறார். உன் மீது எனக்கு எந்த விதமான உணர்வும் வரவில்லை, ஆனால் எப்படி உள்ளே வேறு மாதிரி போகிறது என்று எனக்கு தெரியவில்லை, நீ என்னிடம் செய்வதெல்லாம் ஒரு குழந்தையிடம் செய்வது மாதிரி தான் இருக்கிறது என்று கூறினார்.
நானும் அப்படி நினைத்து தான் செய்கிறேன், ஆனால் அவங்க வேற மாதிரி சொல்றாங்களே என்று நிக்சன் கூற, எனக்கு மூன்று நாளாக தலைவலியாக இருக்கிறது, நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை, நீ இவ்வாறு செய்வது எனக்கு ரொம்ப மனது கஷ்டமாக இருக்கிறது என்று கூறுகிறார். ஒரு கட்டத்தில் ஐஷு 'நான் இந்த வாரம் வெளியே போனால் கூட நன்றாக இருக்கும் என்று கூறியதை பார்க்கும்போது நிக்சனால் ஐஷு எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்திருக்கிறார் என தெரிய வருகிறது.
மொத்தத்தில் நிக்சனை லவ் பண்ணவில்லை என்று ஐஷு கிட்டத்தட்ட வெளிப்படையாகவே கூறிவிட்டார். எனவே இனிமேலாவது நிக்சன் ஐஷுவிடம் இடைவெளியை கடைப்பிடிப்பாரா அல்லது மீண்டும் நெருக்கமாக முயற்சிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Oruvela AI velaya irukumo!!
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 8, 2023
pic.twitter.com/7e0OgC1j4f
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments