பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ஐஷு.. உருக்கமான கடிதம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஐஷு, கடந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் பிரதீப் உட்பட ஒரு சிலரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,. என்னை நம்பிய அனைவருக்கும் நான் ஏமாற்றத்தை அளித்து விட்டேன். இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பை தந்த போதிலும், என்னை போன்ற ஆயிரம் பெண்கள் இந்த வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் சக பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டேன்.
என்னை பார்த்து எனக்கே மரியாதை இழந்து விட்டது. ஒருவரை விரும்புவது, விரும்பப்படுவது, மிகவும் வெறுக்கப்படுவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய தவறான செயல்களில் இருந்து என்னை காப்பாற்ற முயன்ற யுகேந்திரன் அவர்கள், விச்சும்மா அவர்கள் பிரதீப் மற்றும் அர்ச்சனா, மணி ஆகியோர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தளம், ஆனால் மிக விஷமத்தனமான நபர்களை சந்தித்த நிகழ்ச்சியும் இதுதான். சக போட்டியாளரை எவ்வளவு தான் நேசித்தாலும், மதித்தாலும், அவர்களைப் பற்றி எப்போதும் எதிர்மறையான விஷயங்களை சொல்ல வைக்கிறார்கள். இதனால் நீங்கள் பொய் பேசும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
நான் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியானவர் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. கோபம், காதல், பொறாமை, நட்பு ஆகியவை என்னை கண்மூடித்தனம் ஆகிவிட்டது. எனக்கு கிடைத்த முதல் பெரிய மேடை இதுதான். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது கொள்வது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை.
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் என் குடும்பத்தை தயவுசெய்து விட்டு விடுங்கள். சமூக ஊடகங்களில் என்னை பற்றிய கருத்துக்கள் வீடியோக்களை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கற்களை என் மீது எவ்வளவு வேண்டுமானாலும் எறியுங்கள். ஆனால் தயவு செய்து என் குடும்பத்தை விட்டு விடுங்கள். இன்று வரை என்னை வளர்ப்பதற்காக அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நான் தவறு செய்ததினால் என்னை தவறான திசையில் சில பழக்கங்கள் திருப்பி விட்டன.
இந்த நிகழ்ச்சி என்னை தற்கொலை செய்து கொள்ளும் வரை தள்ளிவிட்டது. ஆனால் என் பெற்றோர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் மட்டும் நான் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வனிதா அவர்கள், சுரேஷ் தாத்தா அவர்கள் என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்கள் மீது ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன். வனிதா அவர்களின் மகளை விட ஒரு வயது தான் அதிகம், இப்போது நான் அவரை போல் முதிர்ச்சியுடன் வலிமையுடனும் இல்லாமல் இருக்கலாம் ,ஆனால் ஒரு நாள் நான் அப்படி இருப்பேன்.
பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததற்காக உண்மையிலேயே நான் வருந்துகிறேன். அவருடைய நல்ல நோக்கங்களை இப்போது நான் புரிந்து கொண்டேன். என்னுடைய எபெக்ட் எனக்கு பிறகு ஆவது நிக்சன் நன்றாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இந்த நிகழ்ச்சியில் எனது செயல்கள் இழிவாக, அவமரியாதையாக, முதிர்ச்சியாற்றதாக இருந்ததால் என்னை நானே வெறுக்கிறேன். என் வீட்டில் உள்ளவர்கள் என்னை நம்பி காத்திருந்தார்கள். அவர்களுக்கு நான் அவமானத்தை தந்து கொடுத்து விட்டேன். சில நட்புகள் தவறான தொடர்புகள் மற்றும் நான் எடுத்த தவறான முடிவுகள் என்னை குருடாக்கிவிட்டது. . எது சரி, எது தவறு என்று தெரிந்தும் உண்மையை கவனிக்க நான் தவறிட்டேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments