நாளை பூமியின் வெளிப்புறச் சுற்றுப்பாதையை பதம் பார்க்க இருக்கும் சிறிய கோள்… பீதியைக் கிளப்பும் தகவல்!!!
- IndiaGlitz, [Tuesday,October 06 2020]
பூமியின் வெளிப்புற சுற்று வட்டப் பாதையில் நாளை சிறிய கோள் ஒன்று மோத இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த சிறிய கோளானது அளவில் போயிங் 747 விமானம் அளவிற்கு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நாசா விஞ்ஞானிகள் கடந்த மாதம் புதிதாக சிறிய கோள் ஒன்றை கண்டுபிடித்து இருந்தனர். அந்தக் கோளிற்கு 2020 ஆர்.கே.2 என்று பெயரும் வைக்கப்பட்டது. இந்தக் கோள் பூமியில் இருந்து 23 லட்சத்து 80 ஆயிரம் மைல் தொலைவில் சுற்றுவட்டப் பாதையைக் கடக்கும் என எதிர்ப்பார்க்கப் பட்டது. தற்போது இந்த கோள் பூமியின் சுற்றுப்பாதையை மோதும் என நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் இதனால் பூமிக்கு பாதிப்பு எதுவும் இருக்காது என்றே விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
மேலும் இந்த சிறிய கோளானது சுமார் 118 முதல் 265 அடி அகலம் கொண்டதாகவும் வினாடிக்கு ஆறரை கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மோதிவிட்டு பின்னர் இந்தக் கோள் பூமியைக் கடந்து அதிக தூரம் வரை செல்லக்கூடும் எனவும் நாசா விஞ்ஞானிகள் மதிப்பிட்டு உள்ளனர்.