நயன்தாராவின் 'கா' ரகசியம் இதுதான்

  • IndiaGlitz, [Wednesday,February 27 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களில் ஒன்றாக சமீபத்தில் 'மேகதாது' என்ற சிங்கிள் பாடல் வெளியானது. 

இதனையடுத்து இரண்டாம் சிங்கிள் பாடல் இவ்வாரம் வெளியாகவிருப்பதாகவும், இந்த பாடல் 'கா' என்ற எழுத்தை கொண்ட வார்த்தையில் ஆரம்பிக்கும் என்றும் படக்குழுவினர் சஸ்பென்ஸ் வைத்தனர். இந்த வார்த்தையை கண்டுபிடிக்க ரசிகர்கள் பெரும் முயற்சி எடுத்தனர்

இந்த நிலையில் 'காரிகை' என்ற வார்த்தையில் இந்த பாடல் தொடங்குவதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். 'காரிகை' அல்லது காரிகா என்றால் பெண் என்று அர்த்தமாம். மதன்கார்க்கி வரிகளில் கேஎஸ் சுந்தரமுர்த்தி இசையில் உருவான இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.

முதல்முறையாக இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார். 

More News

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே துணை' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'மீசையை முறுக்கு' திரைப்படத்தை இயக்கி நடித்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, அந்த படம் கொடுத்த வெற்றியால் அடுத்ததாக 'நட்பே துணை' என்ற படத்தில் நடித்து வந்தார்.

ஓவியாவின் 'பழமும் பாலும்' ஸ்னீக்பீக் வீடியோக்கள்!

ஓவியா நடித்த '90ml' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிகாலை 5 மணி காட்சி இந்த படத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிம்பு வீடியோவை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த தொழிலதிபர்

நடிகர் சிம்புவுடன் தான் நெருக்கமாக உள்ள வீடியோவை விளம்பரப்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது

இது என்னுடைய தவறுதான், அட்மின் மீது பழிபோட மாட்டேன்: உதயநிதி

நடிகர் உதயநிதி நடித்த 'கண்ணே கலைமானே' சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது சினிமா, அரசியல் என துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அரசியலில் ரஜினி-கமல் இணைந்தால் மாற்றம் வரும்: பிரபல நடிகர் விருப்பம்

வரும் மக்களவை தேர்தலில் கமல் மற்றும் விஜயகாந்த் கட்சிகள் கூட்டணி அமைத்து அந்த கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தால் கண்டிப்பாக இரு கழகங்களின் கூட்டணிகள் கலக்கம் அடையும்