நயன்தாராவின் 'கா' சஸ்பென்ஸ்: கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் இந்த வாரம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் மதன்கார்க்கி வரிகளில் உருவான இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'மேகதூதம்' என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளதால் இந்த பாடலுக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டாம் சிங்கிள் பாடல் 'கா' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்றும், இந்த பாடல் தொடங்கும் வார்த்தையை கண்டுபிடியுங்கள் என்றும் படக்குழுவினர் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்துள்ளனர். காதல், காலம், கானல், காகம், கானலி, காரணி, காயம், கானம், காரம், காவியா, காமம், காவாய், காற்று, காட்சி, காரிகை என பல வார்த்தைகளை ரசிகர்கள் ஊகித்தபோதும் இவை அனைத்தும் தவறு என படக்குழுவினர் கூறியுள்ளதால், இந்த வார்த்தையை கண்டுபிடிக்க முடியாமல் ரசிகர்கள் திணறி வருகின்றனர்.

இரண்டு வித்தியாசமான வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.

More News

த்ரிஷாவின் ஐந்து மில்லியன் மைல்கல்! ரசிகர்கள் வாழ்த்து

தற்போது சமூக வலைத்தளங்கள் என்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஒவ்வொருவரின் சமூகவலைத்தள பக்கமும் ஒரு மீடியா போல் அவ்வபோது பிரேக்கிங் செய்திகளை அளித்து வருகின்றன.

மூன்றே நாளில் லாபத்தை பெற்ற 'எல்.கே.ஜி'

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவான 'எல்.கே.ஜி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மூன்றே நாட்களில் இந்த படத்தின் பட்ஜெட் தொகையை எடுத்துவிட்டதாகவும்,

விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணியா? கமல் விளக்கம்

அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை தேமுதிக நிர்வாகிகள் எடுக்கவில்லை

ஆட்சியை பிடிப்பது எப்போது? புதிய கட்சி ஆரம்பித்துள்ள இயக்குனர் கவுதமன் பேட்டி!

தமிழ்நாட்டில் ஏற்கனவே நூற்றுக்கும் மேல் அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் கவுதமன் 'தமிழ்ப் பேரரசு கட்சி' என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

30 ஆண்டுகால பந்தம், பாசம் போய்விட்டதே! அன்புமணி வேதனை

7 மக்களவை தொகுதி ஒரு மாநிங்களவை தொகுதிக்காக பாமக தவறான முடிவெடுத்துவிட்டதாக மாற்று கட்சியினர் மட்டுமின்றி பாமகவில் இருக்கும் சிலரே தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.