close
Choose your channels

நயன்தாராவின் 'ஐரா' படம் குறித்த புதிய தகவல்

Saturday, October 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஐரா'. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படம் குறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது. 'அறம்', 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை அடுத்து கோலிவுட்டின் ராணி என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நயன்தாராவின் அடுத்த படம் நிச்சயம் அனைத்து எதிர்பார்ப்பு மற்றும் காத்திருப்புக்கு ஏற்ற வகையில் பிரமாண்டமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக இரட்டை வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை 'மா', 'லட்சுமி போன்ற குறும்படங்களையும், 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, கலையரசான், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த படத்திற்குக் சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவும், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment