close
Choose your channels

ரஜினிக்கு விமானம், நயன்தாராவுக்கு பஸ்: பிரமாண்ட விளம்பரங்கள்

Wednesday, March 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படம் என்னதான் சூப்பராக உருவாக்கினாலும் இன்றைய விளம்பர உலகில் புரமோஷன் இல்லாமல் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட ஓடாது. சமீபத்தில் வெளிவந்த 'எல்.கே.ஜி' திரைப்படம் அதன் பிரமாதமான புரமோஷனால் தான் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது என்பது ஒரு நல்ல உதாரணம்.

இந்த நிலையில் தமிழ்த்திரையுலகில் முதல்முறையாக விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட படம் ரஜீனியின் 'கபாலி'. அதேபோல் வரும் 28ஆம் தேதி வெளிவரவுள்ள நயன்தாராவின் 'ஐரா' படத்தின் புரமோஷனுக்காக பிரத்யேகமாக ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் நான்கு பக்கங்களிலும் இந்த படத்தின் புரமோஷன் போஸ்டர்கள் உள்ளன. குறிப்பாக பேருந்தின் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.சி.டி திரையில் இந்த படத்தின் டிரைலர் உள்பட மற்ற புரமோஷன் வீடியோக்கள் திரையிடப்படும்.

இந்த பஸ் இன்னும் இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. கேஜேஆர் நிறுவனத்தின் இந்த வித்தியாசமான விளம்பர யுக்தியால் இந்த படம் இப்போதே வெற்றி பெற்றுவிட்டதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment