பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்படும் 'ஏஐஆர்': தமிழ் உள்பட 6 மொழிகளில் பார்க்கலாம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் தயாரித்துள்ள விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்ற பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் (AIR) திரைப்படம் ஏப்ரல் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 6 மொழிகளில் ஏஐஆர் பிரத்யேகமாக திரையிடப்படும்.
அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், மாண்டலே பிக்சர்ஸ் மற்றும் அஃப்லெக் மற்றும் மேட் டாமோனின் ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டியின் முதல் திட்டமான பென் அஃப்லெக்கின் ஏஐஆரின் டிஜிட்டல் பிரீமியர் பிரைம் வீடியோவில் மே 12 முதல் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என இந்தியாவின் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ இன்று அறிவித்தது. இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஆண்டுக்கு ரூ.1499 மட்டுமே செலுத்தி உறுப்பினராச் சேர்ந்து பண சேமிப்போடு, வசதியாக பொழுதுபோக்கு நிகழ்சிகளை பிரைம் வீடியோ மூலம் அனுபவிக்கிறார்கள். தற்போது இந்தியாவிலுள்ள பிரைம் உறுப்பினர்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் AIR ஐ பார்க்கலாம்.
AIR ஆனது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது, தற்போது 92% "சர்டிபைட் பிரெஷ் டொமாட்டோமீட்டர் மதிப்பீட்டையும், Rotten Tomatoes இல் 98% சரிபார்க்கப்பட்ட பார்வையாளர்களின் மதிப்பெண்ணையும் "A" சினிமாஸ்கோரையும் பெருமையாகக் கொண்டுள்ளது.
விருது பெற்ற இயக்குனர் பென் அஃப்லெக் வழங்கும் AIR, ஏர் ஜோர்டான் பிராண்டுக்காக விளையாட்டு மற்றும் கலாச்சார உலகில் புரட்சியை ஏற்படுத்திய அப்போதைய புதுமுக வீரர் மைக்கேல் ஜோர்டானுக்கும் நைக்கின் கூடைப்பந்து பிரிவிற்கும் இடையே உள்ள நம்பமுடியாத கூட்டாண்மையை AIR வெளிப்படுத்துகிறது. அனைத்தையும் இழந்த நிலையில் இருக்கும் ஒரு விளையாட்டுக்குழு மேற்கொள்ளும் சவாலான பங்கேற்பு, தன் மகனின் மகத்தான திறமையின் மதிப்பை அறிந்த ஒரு தாயின் சமரசமற்ற பார்வை மற்றும் சிறப்பான நிலையை எட்டப் போகும் ஒரு கூடைப்பந்து வீரரின் சிறப்பு ஆகியவற்றை விமர்சிக்கிறது.
நைக் நிர்வாகி சோனி வக்காரோவாக மாட் டாமன் மேவரிக் நடிக்கிறார், நைக்கின் இணை நிறுவனர் பில் நைட்டாக அஃப்லெக் நடித்துள்ளனர், ராப் ஸ்ட்ராஸராக ஜேசன் பேட்மேன், டேவிட் பால்க்காக கிறிஸ் மெசினா, பீட்டர் மூராக மேத்யூ மஹர், ஜார்ஜ் ராவெலிங்காக மார்லன் வயன்ஸ், ஹோவர்ட் ஒயிட், வயோலாவாக கிறிஸ் டக்கர் டேவிஸ் டெலோரிஸ் ஜோர்டானாகவும், குஸ்டாஃப் ஸ்கார்ஸ்கார்ட் ஹார்ஸ்ட் டாஸ்லராகவும் நடித்துள்ளனர்.
மேட் டாமான் நடித்துள்ள திரைப்படத்தை பென் அஃப்லெக் இயக்குவது இதுவே முதல் முறையாகும். அலெக்ஸ் கான்வரி எழுதியுள்ள ஏஐஆர்-இன் இந்த ஸ்கிரிப்ட்டை, டேவிட் எலிசன், ஜெஸ்ஸி சிஸ்கோல்ட், ஜான் வெயின்பாக், அஃப்லெக், டாமன், மேடிசன் ஐன்லி, ஜெஃப் ராபினோவ், பீட்டர் குபர் மற்றும் ஜேசன் மைக்கேல் பெர்மன் ஆகியோர் தயாரித்துள்ளனர். டானா கோல்ட்பர்க், டான் கிரேஞ்சர், கெவின் ஹலோரன், மைக்கேல் ஜோ, ட்ரூ விண்டன், ஜான் கிரஹாம், பீட்டர் ஈ. ஸ்ட்ராஸ் மற்றும் ஜோர்டான் மோல்டோ ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர் ஆவர்.
புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், சிண்டி லாப்பர், REO ஸ்பீட்வேகன், தி கிளாஷ், நைட் ரேஞ்சர், டைர் ஸ்ட்ரைட்ஸ், கிராண்ட் மாஸ்டர் பிளாஷ், தி பியூரியஸ் பைவ், ஸ்க்வீஸ் மற்றும் பல 80களின் மறக்க முடியாத பாடல்கள் என இத்திரைப்படத்தின் சவுண்ட் டிராக்கில் இணைக்கப்பட்டுள்ள பாடல்கள் இப்போது சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட்டின் கேடலாக் டிவிஷனான லெகசி ரிகார்டிங்க்ஸ் மூலம் டிஜிட்டல் முறையில் கிடைக்கின்றன.
.@BenAffleck and #MattDamon hit a slam dunk with this one 🏀
— prime video IN (@PrimeVideoIN) May 2, 2023
a film about legends made by legends
watch #AirOnPrime may 12 pic.twitter.com/1T1PQwU624
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments