காற்று மாசுபாட்டினால் கொரோனா உயிரிழப்பு அதிகமாகிறதா??? உண்மை நிலவரம் என்ன???

  • IndiaGlitz, [Friday,April 24 2020]

 

கொரோனா நோய் பரவுவது குறித்தும் பாதிப்பு ஏற்படுவது குறித்தும் உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஏனெனில் கொரோனா இதுவரை இல்லாத அளவிற்கு உலகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வீரியம், பரவும் விதம், பலி எண்ணிக்கை என்பன போன்ற பல காரணிகள் உலகம் மழுவதும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. எனவே கொரோனாவைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

தற்போது, “காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை விகிதம் அதிகமாக இருப்பதாக ஒரு ஆய்வு வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து, உலகச் சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. “கொரோனா பரவல் நேரத்தில் உலக நாடுகள் காற்று மாசுபாட்டையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என WHO வின் பொதுக் சுகாதார நிபுணர் மரியா நெய்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் தற்போது மருத்துவர்கள் கூறுகின்றனர். காற்று மாசுபாடு உள்ள நாடுகளில் இருப்பவர்களது நுரையீரலில் ஏற்கனவே பாதிப்பு அதிகமாக இருக்கும், மேலும் அவர்களை கொரோனா நோய்த்தொற்று தாக்கும்போது அவர்கள் இரட்டிப்பு வேதனையை அனுபவிக்க வேண்டிவருகிறது எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் காற்று மாசுபாடு அதிகம் உள்ளதாக WHO கணிப்பு கூறுகிறது. எனவே இந்நாடுகள் காற்றின் மாசுபாட்டு அளவை குறைக்கவும் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என WHO வலியுறுத்தி வருகிறது. கொரோனா பரவல் நேரத்தில் இத்தகைய சாத்தியங்கள் குறைவு என்றாலும் இது கவனிக்க வேண்டிய விஷயம் எனவும் WHO தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 7 மில்லியன் மக்கள் மாசுபாடான காற்றை சுவாசித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக பலவித நோய்களும் ஏற்படுகின்றன. தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் சகாரா போன்ற இடங்களில் மாசுபாட்டின் அளவு அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டின் WHO கணிப்புப்படி சிலி, பிரேசில், மெக்சிகோ, பெரு, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக மாசு நிலவியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பலி எண்ணிக்கைக்கு காற்று மாசுபாடும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என வெளியிடப்பட்ட கருத்துகளால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹார்டுவார்டு பல்கலைக்கழகம் கொரோனா பலி எண்ணிக்கையில் காற்று மாசுபாடு முக்கிய பங்கு வகிக்கிறதா? என்பதைக் குறித்து முக்கிய ஆய்வினை மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் காற்று மாசுபாடு அதிகமுள்ள நாடுகளில் மனிதர்களுக்கு நுரையீரலில் மாசுபாட்டு நுண்பொருட்கள் அதிகம் காணப்படுகின்றன எனவும் அவர்களது சுவாசப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மற்ற நாடுகளைவிட காற்று மாசுபாடு உள்ள நாடுகளில் 15% கொரோன பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது எனவும் ஆய்வு கூறுகிறது.

ஹார்டுவார்டு பல்கலைக்கழக ஆய்விற்கு, ஷான் ஹாப்பின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் மற்றும் CSSE மருத்துவமனை சேகரித்த தரவுகள் மற்றும் தேசிய காற்று மாசுபட்டு அளவு போன்றவை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. காற்று மாசுபாடு அதிகமுள்ள நாடுகளில் காணப்படும் நுண்துகள் மாசுபாடு PM2.5 ஆக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அளவு மாசுபாடு அதிகபடியான மரணத்தை ஏற்படுத்தும் எனவும் ஹார்டுவார்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். PM2.5 அளவானது தலைமுடியின் அளவில் 13 பங்கில் ஒரு பங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை குறைவான நுண்துகள் கூட மனிதர்களுக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். காற்று மாசுபாட்டினால் நுண்துகள் நுரையீரலில் கலந்து அவை ரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.

இதேபோன்று, வடக்கு இத்தாலியில் நிலவும் மாசுபாட்டின் அளவினால் நிறைய மரணங்கள் நிகழ்கின்றன என்று Science Direct ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், சியனா பல்கலைக்கழகமும் டென்மார்க்கின் ஆர்கால் பல்கலைக்கழகமும் இணைந்து லம்பார்டி, எமிலியா, ரொமாக்னா போன்ற பிராந்தியங்களில் காற்று மாசுபாட்டின் அளவுக்கும் கொரோனா பலி எண்ணிக்கைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் இந்த 3 பிராந்தியங்களின் பலி எண்ணிக்கை 12% ஆகவும் மற்ற பிராந்தியங்களின் பலி எண்ணிக்கை 4.5% ஆகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹார்டு வார்டு பல்கலைக்கழகம், இத்தாலி ஆய்வு, சியனா –டென்மார்க் ஆர்கால் பல்கலைக்கழக ஆய்வு என அனைத்தும் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்புக்கு காற்று மாசுபாடு முக்கிய காரணமாக இருப்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது. இதற்கு மாறாக வேறுபட்ட காரணங்கள் கூறப்பட்டாலும் மற்றவர்களை விட காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளில் வாழ்பவர்களின் சுவாச மண்டலம் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என கொரோனா நோய்த்தொற்று சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர்களுக்கு தீவிரச் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கத்திய நாடுகளை விட பெரும்பாலான ஏழைநாடுகளில் தான் காற்று மாசுபாடு அதிகம் காணப்படுகிறது. 2019 ஆம் ஆண்டின் WHO கூறிய காற்று மாசுபாடான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும், இந்தியச் சுகாதாரத் துறை காற்று மாசுபாட்டினால் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு ஆதாரம் இல்லை என எந்த ஆய்விலும் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை, கோவை, மதுரையில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி

சென்னை, கோவை, மதுரை ஆகீய மாநகராட்சிகளில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரையிலும், திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 28 வரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு

உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? கமல்ஹாசன் ஆவேசம்

கோவையில் அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகக் கூறி ஆன்லைன் பத்திரிகை நிறுவனர் மற்றும் அவரது பத்திரிகையில் பணிபுரியும் இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி

பூமித்தாய்க்காக ஒரு பாடல்: உலக இசை மேதைகளுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

நேற்று அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் கம்போஸ் செய்த 'ஹேண்ட்ஸ் அரெளண்ட் த வேர்ல்ட்

சாதாரணமாக நினைக்க வேண்டாம்: கொரோனாவில் இருந்து மீண்ட மணிஹெய்ஸ்ட் நடிகை

மணி ஹெய்ஸ்ட் (Money Heist) என்ற உலகப்புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடரில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ (Itziar Ituño).

ஏடிஎம்-இல் பணம் எடுத்த 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்!

குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா என்ற பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்-இல் நேற்று ராணுவ வீரர்கள் மூவர் பணம் எடுத்துள்ள நிலையில் அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பது இன்று கண்டறியப்பட்டது.