close
Choose your channels

ZEE5-ல் மித்தாலஜி திரில்லர் 'ஐந்தாம் வேதம்' டீசர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..1

Saturday, October 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.

90களில் புகழ்பெற்ற புராண சாகச த்ரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குனர் நாகா இயக்கியிருக்கும், ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் அசத்தலான டீசரை ZEE5 வெளியிட்டுள்ளது. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரிஸின் டீசர், சீரிஸின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது.

அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு, வாரணாசிக்கு செல்லும் ஒரு பயணத்தில் இந்த கதை தொடங்குகிறது. வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் - ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது.

தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடைய போராடுவது அவளுக்கு தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளை சூழ்கிறது. இந்தத் தடைகளை தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பதுதான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம். ZEE5 இல் அக்டோபர் 25 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகும் ஐந்தாம் வேதம் சீரிஸின் மூலம் மர்மங்கள் அடங்கிய புதிய சாகசத்தில் இணையுங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment