கொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அவர்களின் நுரையீரல் மட்டுமல்லாது பல உடல் உறுப்புகளும் மோசமாகப் பாதிக்கப் படுவதை மருத்துவர்கள் உறுதி செய்து இருந்தனர். அந்த வகையில் காது கேளாத தன்மைக்கூட ஏற்படுகிறது என்பதை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். தற்போது மீண்டும் அதேபோல புதிய பக்கவிளைவு ஒன்று ஏற்பட்டு இருப்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வெளியிட்டு உள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமிக்கு முதலில் மூளைப் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மேலும் அச்சிறுமியை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவருக்கு அக்யூட் டெமிலினேட்டிங் நோய்க்குறி (ஏடிஎஸ்) இருந்ததையும் உறுதிப்படுத்தினர். இந்த அறிகுறியைத் தொடர்ந்து அச்சிறுமிக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கொரோனா பாதித்த பெரும்பாலானவர்களுக்கு மூளை மற்றும் அவர்களின் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பின்போது மூளையில் உள்ள ஏடிஎஸ் எனும் நரம்புகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மூளை நரம்புகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதை அடுத்து மூளையில் உள்ள மெய்லின் எனப்படும் நரம்புகளை ஒட்டியிருக்கும் பாதுகாப்பு அடுக்குகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
தற்போது கண்பார்வை இழப்பு ஏற்பட்ட சிறுமிக்கும் மெய்லின் எனும் பாதுகாப்பு பகுதியில் ஏற்பட்ட தாக்கத்தால் கண்பார்வை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுபோல மெய்லின் அடுக்குகளில் பாதிப்பு ஏற்பட்டால் மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகள் சேதப்படும், பார்வை இழப்பு, தசை இயக்கம், புலன்கள் இழப்பு, சிறுநிர்ப்பை பாதிப்பு மற்றும் குடல் இயக்கப் பாதிப்பு போன்ற நரம்பியல் குறைபாடுகள் ஏறபடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout