சசிகலாவிடம் சுஜாதா சொன்னது..... அதிமுக-வில் சலசலப்பு...!வெளியான ஆடியோ...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சசிகலா அதிமுக-வில் இணைவது, கட்சியை ஒருங்கிணைப்பது குறித்த ஆடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழக அரசியலில் புது உருவத்தை முன்னெடுத்துள்ளார் சசிகலா. சமீபத்தில் அதிமுக தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அதில் கட்சித்தலைமையை ஏற்பேன், கட்சியை ஒருங்கிணைப்பேன், அதிமுகவை பழைய நிலைக்கு கொண்டு வருவேன், கொரோனா முடிந்ததும் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவேன் என்று சசிகலா பேசும் ஆடியோக்கள், தொண்டர்களுக்கு புது நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் மதுரை அதிமுக நிர்வாகி சுஜாதாவிடம் சசிகலா பேசியா ஆடியோ அண்மையில் வெளியானது. அதில் சசிகலா பேசியிருப்பதாவது,
"கட்சி எனக்கு ரொம்பவும் முக்கியம், கட்சியை காப்பாற்றுவேன், தொண்டர்கள் தான் எனக்கு முக்கியம். அம்மா ஆட்சி நடத்தியது போலவே, மீண்டும் ஆட்சியை நடத்துவேன். எல்லோரும் கவலைப்படாமல் இருங்கள், கட்சியை மீட்பது மட்டுமில்லாமல் ஆட்சியையும் மீட்டெடுப்போம்" என்று பேசியிருந்தார்.
சசிகலா இப்படி தொடர்ந்து அதிமுக கட்சியை குறித்து பேசி வந்தாலும், கட்சி நிர்வாகிகள் பலரும் இவருக்கு வெளிப்படையான ஆதரவை தரவில்லை. இதற்குள்ளே இங்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும், பன்னீர் செல்வத்திற்கும் பனிப்போர் நடந்து வருகிறது. கட்சியில் இருக்கும் கீழ்மட்ட தொண்டர்கள் மற்றும் பெயரே தெரியாத நிர்வாகிகள் தான் சசியை ஆதரித்து வருகிறார்கள். ஆனால் சசிகலாவிடம் போனில் உரையாடிய நிர்வாகி சுஜாதா வர்ஷினி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சுஜாதா பேசியிருப்பதாவது,
"என்னுடைய பையனும் ஓபிஎஸ்-ம் உங்களை கட்சியில் சேர்ப்பது குறித்து பேசினார்கள். ஆனால் அவருக்கு கட்சியில் உங்களை சேர்க்க விருப்பமில்லையாம். உங்களை பற்றி பேசினாலே, கட்சியில் நடவடிக்கை எடுக்கிறார்களாம்" என்று வர்ஷினி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. இவர் என பேசியது எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம் அல்லது கேபி.முனுசாமியாக இருக்கலாம் என கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. எடப்பாடி அவர்கள் கட்சியில் பன்னீர் செல்வத்திற்கு சரியான முக்கியத்துவம் தராததால், ஓபிஎஸ் சசிகலா பக்கம் சாய்வதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com