சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக- முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி விளக்கம்!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி கோவை பேரூர் செட்டிப்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 123 ஜோடிகளுக்கு 73 சீர் வரிசைகள் கொடுக்கப்பட்டு சிறப்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாதி-மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக என்பதற்கு இத்திருமண மேடையே சாட்சி எனத் தெரிவித்தார். மேலும் அதிமுக சார்பில் ஆண்டு தோறும் ஜெயலலிதா பிறந்தநாளில் இலவசத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இப்படிபட்ட நிகழ்வுகளை அதிமுகவில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் கூறினார்.

மேலும் திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கு தமிழக அரசு ரூ.6,010 கோடி நிதியை ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2,98,849 பேர்களுக்கு மானியத்தொகை வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் நேரத்தில் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டும் சொல்லி, அதை செயல்படுத்துகிற கட்சியாக அதிமுக இருந்து வருகிறது என்றும் ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

அந்த வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது என முதல்வர் சுட்டிக் காட்டினார். மேலும் புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளோம். இந்தியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற மாநிலம் தமிழகம் என தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் ஓ.எஸ். மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த 123 திருமண ஜோடிகளுக்க அமைச்சர் எஸ்.பி வேலுமணி தன்னுடைய சொந்த செலவில் 73 வகையான சீர் வரிசைகளை வழங்கி இருக்கிறார். இதுவும் திருமண ஜோடிகளுக்கு கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

தனுஷ் தான் தலைவரா? 'தி க்ரே மேன்' படத்தின் லீக் ஆன தகவல்!

தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரே மேன்' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில்

பொதுநலனுக்காக போராடினால் தேசத்துரோக வழக்கா? கமல்ஹாசன்

டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சுற்றுச்சூழல் அக்கறையாளர் திஷா ரவி

ம.பி.யில் நடந்த பயங்கரம்… பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

நல்லா இருக்கு ஆஷ்… கோலியின் தமிழை பார்த்து வாயை பிளந்த இன்னொரு வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது

அருவியில் ஆனந்தக்குளியல் போடும் விஜய் டிவி தொகுப்பாளினி: வைரல் வீடியோ

விஜய் டிவியில் தொகுப்பாளினி ஆகவும் சீரியல்களில் நடித்த நடிகையுமான ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவியில் ஆனந்த குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது