சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக- முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி கோவை பேரூர் செட்டிப்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 123 ஜோடிகளுக்கு 73 சீர் வரிசைகள் கொடுக்கப்பட்டு சிறப்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாதி-மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக என்பதற்கு இத்திருமண மேடையே சாட்சி எனத் தெரிவித்தார். மேலும் அதிமுக சார்பில் ஆண்டு தோறும் ஜெயலலிதா பிறந்தநாளில் இலவசத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இப்படிபட்ட நிகழ்வுகளை அதிமுகவில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் கூறினார்.
மேலும் திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கு தமிழக அரசு ரூ.6,010 கோடி நிதியை ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2,98,849 பேர்களுக்கு மானியத்தொகை வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் நேரத்தில் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டும் சொல்லி, அதை செயல்படுத்துகிற கட்சியாக அதிமுக இருந்து வருகிறது என்றும் ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
அந்த வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது என முதல்வர் சுட்டிக் காட்டினார். மேலும் புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளோம். இந்தியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற மாநிலம் தமிழகம் என தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் ஓ.எஸ். மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த 123 திருமண ஜோடிகளுக்க அமைச்சர் எஸ்.பி வேலுமணி தன்னுடைய சொந்த செலவில் 73 வகையான சீர் வரிசைகளை வழங்கி இருக்கிறார். இதுவும் திருமண ஜோடிகளுக்கு கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments