நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட...! கலாய்த்து தள்ளிய விந்தியா...! அதிரும் மதுரை...!
- IndiaGlitz, [Tuesday,March 23 2021]
ராகுலுக்கு பிரதமர் கனவு, உதயநிதிக்கு முதல்வர் கனவு- இதற்கு இவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க என அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மீது பேரன்பும், மிகுந்த பக்தியும் கொண்டவர் நடிகை விந்தியா. அம்மாவை ரோல் மாடலாகவும் எடுத்து வாழ்ந்து வருகிறார். ஜெ-வின் இறப்பிற்கு பின் அதிமுகவிலிருந்து பலர் விலகியும், கட்சியிலிருந்து கட்சி தாவியும் இருந்தனர். ஆனால் விந்தியா மட்டும் அதிமுகவில் இன்னும் பணியாற்றி வருகிறார். பிரச்சாரங்கள் என்றால் முதல் ஆளாக களமிறங்கும் விந்தியா, நட்சத்திர பேச்சாளர் என்ற பொறுப்பிலிருந்து, கொள்கை பரப்பு துணைச் செயலாளராக உயர்ந்துள்ளார்.
மதுரையில் பிரச்சாரம்-
மதுரையில், திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி பஸ் ஸ்டாண்டில், அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாக பேசி வாக்குகள் திரட்டினார் விந்தியா.
அதில் விந்தியா பேசியதாவது,
'ஜல்லிக்கட்டு என்றால் எனக்கு பிடிக்கும், ஏனென்றால் அங்கு திமுக போல் பூம்பூம் மாடுகள் வராது, கொம்பு வைத்த சிங்கங்கள் தான் வரும்'. அதைப்பார்க்க வேண்டும் ஆசையில் டிவி போட்டேன், ஆனால் என் மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அதற்கு காரணம் அங்கு விவரம் கெட்ட ராகுல் காந்தியும், விவஸ்தை கெட்ட உதயநிதியும் வந்திருந்தாங்க. ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டுவந்துட்டு, அதை பார்க்கவும் வந்திருந்தார்கள்.
ராகுலுக்கு பிரதமர் கனவு, உதயநிதிக்கு முதல்வர் கனவு- இருவரும் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க. ஸ்டாலின் விளம்பரங்களை மட்டும் பிரமாண்டமாக தரக்கூடியவர். நமக்கு நாமே, வருங்கால முதல்வரே, விடியலை நோக்கி என்ற வசனங்களை போஸ்டரில் ஒட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். திமுக செல்லாத ஒரே கடை சாக்கடை மட்டும்தான்.ஸ்டாலின் தேர்தல் வந்தா போதும் பங்காளி,பாட்டாளி, விவசாயி வேஷம் எல்லாம் போடுவார், வாய்க்கு வந்ததை இஷ்டத்திற்கு சொல்லிவிட்டு, பின் அதை செய்ய மாட்டார்கள் என திமுக-வை கலாய்க்கும் விதத்தில் விந்தியா பிரச்சாரம் செய்தார்.
மற்ற கட்சிகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி மட்டும் ஓட்டுக்கேட்க மாட்டோம், அதிமுக செய்த நல்லவற்றையும், சாதனைகளை கூறியும் ஓட்டுக்கேட்போம். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போன்ற தலைவர் திமுக-வில் உள்ளார்களா..? கடைசி தேர்தல் என்று கூறி ஏமாற்றிய திமுகவிற்கு, இது கடைசி தேர்தல் என மக்களாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும் எனவும் விந்தியா கூறினார். விந்தியாவின் பிரச்சாரங்கள் அரசியில் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.