திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக… என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகியும் நிறைவேற்றாமல் இருப்பதாகக் கூறும் அதிமுகவினர் அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முழுவதும் தங்களது வீடுகளில் இருந்தபடியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அக்கட்சியின் நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் எனப் பலரும் பங்கேற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம் போடியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தனது வீட்டின் முன்பு இந்த ஆர்ப்பார்ட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது. இதில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக்கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட பல முக்கியமான கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களையும் பெற்றோரையும் திமுக அரசு குழப்பி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதைத்தவிர அதிமுக ஆட்சியின் மின்மிகை மாநிலமாகத் தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் மீது பொய்வழக்கு போடுவதை இந்த அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடத்தப்படும் இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் கூறியுள்ளார். மேலும் அதிமுக கட்சி தொட்ர்ந்து மக்கள் பிரச்சனைக்களுக்காக குரல் கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்.
— Subash Prabhu R (@subashprabhu) July 28, 2021
சென்னை ராயபுரத்தில் பாட்டுப்பாடி போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே.... ! #AdmkProtest @Stalin__SP @mathavanguru19 @hemaPT @AIADMKOfficial @Vignesh_twitz pic.twitter.com/5ab5yvb8W6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments