வீட்டில் விளக்கேற்றி தீபம்- அதிமுகவினருக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாள் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்வர் என்றும் முன்னதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒரு வேண்டுகோள் விடுத்து உள்ளனர். அதன்படி ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி வரும் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அனைத்து அதிமுக தொண்டர்களும் தங்களுடைய வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் அதிமுகவை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் மக்களுக்கு தான் இயக்கம் சொந்தம். அதிமுகவை விலை கொடுத்து வசை பாடி, வசியப்படுத்தியோ வாங்க முடியாது. நல்லாட்சி பெற்ற மக்களுக்கும் நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருக்கிறார்கள். எதிரிகளும் துரோகிகளும் கைகோர்த்துக் கொண்டு நம் படையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். உழைப்பு, உத்வேகம், ஒற்றுமை உணர்வால் அவர்களை தோற்கடித்து விரோதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பிப்ரவரி 24 மக்களை கண் இமைபோல் காத்த கடவுள் அம்மாவின் பிறந்த நாள்.
இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் “என் இல்லம் அம்மாவின் இல்லம்“ என்று உளமார நினைத்துக் கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். கண்களை மூடியவாறு உள்நோக்கி பார்த்து நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆத்மாவிடம் பிரார்த்தனை செய்து உயிர் மூச்சு உள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும் மக்களுக்கான இந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும் காப்பேன். இது அம்மா மீது ஆணை என்று கூறுங்கள். இந்த உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments