விரைவில் அதிரடி உத்தரவு வரும். சசிகலாவை சந்தித்த பின் கருணாஸ் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,May 23 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆரம்பத்தில் அதிமுக தலைவர்களும் நிர்வாகிகளும் சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர். ஆனால் தற்போது அவரை கிட்டத்தட்ட பெரும்பாலான தலைவர்கள் மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ் தற்போது பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்துள்ளார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் அமைச்சர் ரமணா, மொளச்சூர் பெருமாள், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சென்றனர்.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் கட்சி, ஆட்சி குறித்த தற்போதைய நிலை குறித்து சசிகலாவிடம் கருணாஸ் விளக்கியதாவும், அவற்றை பொறுமையுடன் கேட்ட சசிகலா, சில ஆலோசனைகளையும் கூறியதாகவும் கருணாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், கூடியவிரைவில் கட்சி தொண்டர்களுக்கு சசிகலாவின் அதிரடி உத்தரவுடன் கூடிய கடிதம் வரும் என்றும் அதுவரை தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு இழுபறியில் உள்ள நிலையில் சசிகலாவிடம் இருந்து எந்த மாதிரியான உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக வட்டாரங்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

'விஸ்வரூபம் 2' குறித்த முக்கிய தகவல்: கமல் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' திரைப்படம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து கடந்த 2013ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது...

ஜிஎஸ்டி வரி எதிரொலி: ஜூனில் ரிலீசாக குவியும் திரைப்படங்கள்

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி திட்டத்தை திரைத்துறைக்கும் வழங்கியுள்ளதால் வரும் ஜூலை 1 முதல் திரைத்துறைக்கும் 28% வரி விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது...

விஷாலின் ஆன்லைன் டிக்கெட் திட்டத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டிப்பு

தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் நேற்று சங்கத்தின் சார்பில் ஒரு இணணயதளம் தொடங்கப்படும் என்றும் இனிமேல் அதன் மூலம் மட்டுமே ஆன்லைனில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் இதற்கு அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் பேசியிருந்தார்...

இந்திய அரசியலமைப்பு சட்டம் ரஜினிக்கு தெரியாது: பிரபல அரசியல்வாதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று சென்னையில் ஒரு அமைப்பின் சார்பில் ரஜினி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது...

ஆக்சன் கிங் அர்ஜூனின் 'நிபுணன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்த 150வது திரைப்படமான 'நிபுணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...