அஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு ஏன் இல்லை? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அதிமுக அரசு மீது கடுமையான விமர்சனம் செய்து வருவதும், அதற்கு தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 'திமுக ஆட்சியில் இருந்த போது நடிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று அஜித் குமார் பேசியப்போது கமல்ஹாசன் எங்கு சென்றார்? என்றும், நடிகர் அஜித் குமாருக்கு இருந்த தைரியம் கமலுக்கு இல்லாமல் போனது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கமல் தன்னுடைய குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் கொடுத்தால் அந்த குற்றச்சாட்டுக்கள் கவனத்தில் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.