ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. மொத்த எண்ணிக்கை 9 ஆனது
Send us your feedback to audioarticles@vaarta.com
முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஏற்கனவே 8 எம்.எல்.ஏக்களும், 12 எம்பிக்களும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் சற்று முன்னர் மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இதனால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
அதிமுகவுக்கு மொத்தம் 134 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அவர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் 133ஆக குறைந்தது. இவர்களில் 9 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். மைலாப்பூர் எம்.எல்.ஏ கே.நட்ராஜ் இன்னும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் சபாநாயகரையும் கழித்துவிட்டால் தற்போது சசிகலா வசம் 122 எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும். ஆனால் 119 எம்.எல்.ஏக்கள் தான் சசிகலா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே 3 எம்.எல்.ஏக்கள் யார்? அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில் இன்னும் ஒருசில நிமிடங்களில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரவுள்ளதால் தீர்ப்புக்கு பின்னர் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments