அதிமுக மதுசூதனன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி...!

  • IndiaGlitz, [Monday,July 19 2021]


அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் அவர்கள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன் மதுசூதனன், மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் இவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் அவைத்தலைவராகவும், அம்மா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர், சசிகலாவை ஆதரித்து வந்தார். ஜெயலலிதா இறப்பிற்கு பின் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டார். கடந்த ஆண்டு இறுதியிலும் மதுசூதனின் உடல்நலக்குறைப்பாடு காரணமாகவே, அவரை அவைத்தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நான் சாகும் வரை இப்பதிவியில் தொடர்வேன் என மதுசூதனன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.